கடலூர் மாவட்டத்தில் - இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :

கடலூர் மாவட்டத்தில் -  இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

நேரு யுவ கேந்திராவின் சார்பில் இளைஞர் மன்ற விருதுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என்று மாவட்ட இளை ஞர் நல அலுவலர் ரிஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறப்பாக சேவைபுரியும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன்படி 2020- 21-ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு கடலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவுப்பெற்று நேரு யுவ கேந்திரா உடன் இணைந்து செயல்படும் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021 மார்ச் 31ம் தேதி வரை மேற்கொண்ட பணிகள் மட்டுமே விருதுக்கு பரிசீலிக்கப்படும். மாவட்ட அளவிலான விருதிற்கு தேர்வு செய்யப்படும் இளைஞர் மன்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் காசோலையும் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங் கப்படும்.

விருதுக்கான விண்ணப்பங் களை ‘நேரு யுவகேந்திரா அலுவலகம், 5 ஏ, சக்கரை கிராமணி தெரு, 2-வது தளம், புதுப்பாளையம், கடலூர் 607001’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது முகவரியிட்ட ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய உரையுடன் கடிதம் அனுப்பியும் பெறலாம். இதில் தாங்கள் செய்த சேவைக்கான ஆதாரங்களை இணைத்து வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேர்வு செய்யப்படும் இளைஞர் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in