Published : 22 Nov 2021 03:07 am

Updated : 22 Nov 2021 03:07 am

 

Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM

ராமேசுவரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: கோட்ட மேலாளர் தகவல் :

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை கோட்டத்தில் ரயில் நிலையத்துக்கு ஆண்டுதோறும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய முகப்புக் கட்டிடத்தை மாற்றி அமைத்து மூன்று மாடி கட்டிடமாக அமைக்கும் திட்டம் உள்ளது.

இதையொட்டி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ராமேசுவரம் ரயில் நிலையத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அவருடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா, முதுநிலை கோட்ட மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட பொறியாளர் ஹிரதயேஷ் குமார் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

அரண்மனை 3 :

இன்றைய செய்தி

More From this Author

x