ஈரோட்டில் விபத்து நடந்த இடங்களில் ஆய்வு செய்து தடுக்க நடவடிக்கை : அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சு.முத்துசாமி ஆறுதல் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சு.முத்துசாமி ஆறுதல் தெரிவித்தார்.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் விபத்துகள் நடக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த குமாரவலசு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் லாரி - கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நேற்று ஆறுதல் தெரிவித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, விபத்து நடந்த பகுதியையும் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள புளியமரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கசெய்ய வேண்டியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்லாது, ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே எங்கெல்லாம் விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து, அதனைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in