Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

சிறுவாச்சூர் பெரியசாமி கோயிலில் பாலாலயம் :

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச் சூரில் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் உபகோயிலான பெரியசாமி கோயில் சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் உள்ளது. பெரியசாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்துக்குள் 3 முறை சாமி சிலைகள் உடைத்து சேதப் படுத்தப்பட்டன. இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த நாதன் என்கிற நடராஜன் என்பவரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சேதமடைந்த இக்கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அற நிலையத்துறையினரும், கோயில் நிர்வாகமும் முடிவு செய்தனர்.

சுடு மண் சிற்பங்கள் தயார் செய்வதில் அனுபவமிக்க ஸ்தபதி வெள்ளியனூர் முனியசாமி, அண்மையில் சிறுவாச்சூருக்கு வந்து கோயில் வளாகத்தை பார்வையிட்டார். கோயிலில் வைப்பதற்கான சுடுமண் சிற்பங் களை 6 மாதங்களில் செய்து முடித்து தருவதாக ஸ்தபதி தெரிவித்ததன்பேரில், இக்கோயி லில் நேற்று பாலாலயம் நடை பெற்றது. தொடர்ந்து, சிறப்பு யாகம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x