Published : 22 Nov 2021 03:08 am

Updated : 22 Nov 2021 03:08 am

 

Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

சமையல் மாஸ்டர் வீட்டில் நகை திருட்டு :

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சமையல் மாஸ்டர் வீட்டில் 26 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தில் வசிப்பவர் சமையல் மாஸ்டர் ரமேஷ்(45). இவர், தொழில் ரீதியாக வெளியூர் சென்றுள்ளார். இவரது மகன் சதீஷ்குமார், மகள் சுவேதா ஆகியோர் செய்யாறு தொழிற்பேட்டையில் உள்ள காலணி தொழிற்சாலை பணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி அஞ்சலை நேற்று வீட்டை பூட்டிக் கொண்டு, அருகாமையில் உள்ள உறவினர் வீட்டுக்குசென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.1.25 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தூசி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

அரண்மனை 3 :

இன்றைய செய்தி

More From this Author

x