பாளை.யில் தேசிய நூலக வார நிறைவு விழா :

பாளை.யில் தேசிய நூலக வார நிறைவு விழா :

Published on

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார நிறைவு விழா, பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். மாணவ, மாணவியரை நூலக உறுப்பினராக்கும் திட்டத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தொடங்கி வைத்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து போட்டித் தேர்வுக்கான பயிற்சி மைய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்த முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், திருநெல்வேலி காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, ரமேஷ் ராஜா, மதிவாணன், சிவசுப்பிரமணியன், நல்லபெருமாள், பே. ராஜேந்திரன் கவுரவிக்கப்பட்டனர். வாசகர் வட்ட தலைவர் அ. மரியசூசை, துணைத் தலைவர் கோ. கணபதி சுப்பிரமணியன், மாவட்ட மையநூலக முதல்நிலை நூலகர் இரா. வயலட் முன்னிலை வகித்தனர். திருநெல் வேலி தி சென்னை சில்க்ஸ் மேலாளர் கா. தோப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in