திமுக முன்னாள் எம்எல்ஏ செஞ்சி வே. கண்ணன் மரணம் :

திமுக முன்னாள் எம்எல்ஏ செஞ்சி வே. கண்ணன் உடலுக்கு  அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் அஞ்சலி செலுத்தினர்.
திமுக முன்னாள் எம்எல்ஏ செஞ்சி வே. கண்ணன் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் அஞ்சலி செலுத்தினர்.
Updated on
1 min read

செஞ்சி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செஞ்சி வே.கண்ணன் (68) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல் நேற்று செஞ்சி அருகே பெருங்கப்பூர் கிராமத்தில் உள்ளஅவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் மறைந்த கண்ணனின் உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, மத்திய மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஆர். மாசிலாமணி, செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன், கண்டமங்கலம் ஆர். எஸ்.வாசன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

இறந்த கண்ணனுக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in