தம்பதியைத் தாக்கி நகை, பணம் கொள்ளை :

தம்பதியைத் தாக்கி  நகை, பணம் கொள்ளை :
Updated on
1 min read

கோவையில் வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் தொகையைக் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை சுங்கம் புறவழிச் சாலை அருகேயுள்ள ஆல்வின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (62). பீரோ தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தி (57). தம்பதியின் மகன், மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கருப்பு நிற ஆடையில் முகமூடி அணிந்து வந்த 4 பேர்வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தம்பதி இருந்தஅறைக்குச் சென்று அவர்களை எழுப்பி பணம் கேட்டு மிரட்டி உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் ராஜசேகருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்பயந்து போன சாந்தி பணம் இருக்கும் இடத்தைக் கூறியுள் ளார். தொடர்ந்து சாந்தி அணிந்தி ருந்த 16 பவுன் தங்க நகைகளைப் பறித்த கும்பல், பீரோவிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “வீட்டை விற்று விட்டு பிள்ளைகளுடன் வெளிநாடு செல்ல தம்பதி திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த சில நாட்களாக இடைத்தரகர்கள் அதிகமானோர் அவர்களது வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். மேலும், சில தினங்களுக்கு முன்பிருந்து வேலைக்கு வராத வீட்டின் வேலைக்காரப் பெண் உள்ளிட்டோரின் தகவல்களை சேகரித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in