கவிநாடு கண்மாயில் இருந்து தண்ணீர் திறப்பு :

கவிநாடு கண்மாயில் இருந்து தண்ணீர் திறப்பு :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதகுகள்வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய கண்மாயான கவிநாடு கண்மாய் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மதகுகள் வழியாக குண்டாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை பொறியாளர்கள் கூறியபோது, “கண்மாய்க்கு நீர்வரத்து 250 கனஅடிக்கும் அதிகமாக இருந்ததால், மதகுகள் வழியே சுமார் 75 கனஅடி நீரும், வழக்கமாக கண்மாய் நிரம்பி வெளியேறும் வழியே 75 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது. பிற்பகலில் வரத்து குறைந்ததால் மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரின்அளவு குறைக்கப்பட்டது’’ என்றார்.

இதேபோல, திருவரங்குளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அரங்குளநாதர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து குளம்போல காட்சி அளிக்கிறது. இதை, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in