

ஈரோட்டில் இன்று நடைபெறும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட 419 மையங்களில், இன்று (18-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இம்முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி 1.25 லட்சம் பேருக்கு போடப்படுகிறது. இப்பணிக்காக 1267 பணியாளர்கள் மற்றும் 70 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.