அஞ்சல்துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டு சான்றிதழ் : சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு

அஞ்சல்துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டு சான்றிதழ் :  சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு
Updated on
1 min read

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல் அலுவலக பண விடை கள், சிறுசேமிப்பு படிவங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது.

இதனை சுட்டிக்காட்டி இந்திய ஆட்சி மொழிச் சட்டங்களின்படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதையும், சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்க மாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபடத் தெரிவித்தோம். அனைத்துப் படிவங்களும் தமிழில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

அதனையடுத்து சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலா ளரை சந்தித்தபோது அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் எனவும், ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என உறுதியளித்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள 14 ஆயி ரம் அஞ்சலகங்களுக்கும் தமிழ் படிவங்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தார்.

தற்போது பல அஞ்சலகங் களுக்கும் தமிழில் படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஊழியர்களுக்கு துறை ரீதியான பாராட்டு சான்றிதழ் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது அஞ் சல்துறை வரலாற்றில் முதல் முறையாக பாராட்டு சான்றிதழ் தமிழ் முதன்மை மொழியாக அச் சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழுக்கு கிடைத்த அடுத் தகட்ட வெற்றி. இதனை வர வேற்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in