

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே உள்ள அகரகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பந்துரோஸ் திரவியம். இவர், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பந்துரோஸ் திரவியம் நடந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். ஆய்க்குடி போலீஸார் விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டதாக, சங்கரன்கோவிலைச் சேர்ந்த அல்ஹாஜன்(32), சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் கனி (50) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மேலும் 2 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.