கந்தர்வக்கோட்டை அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சேதம் :

கந்தர்வக்கோட்டை அருகே  தீ விபத்தில் வீடு எரிந்து சேதம் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புதுநகரைச் சேர்ந்தவர் வி.குமார். கூலித்தொழிலாளி. இவரது குடிசை வீட்டில் நேற்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீட்டுக்குள் இருந்த ஆவணங்கள், உடைமைகள், மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை, தீ விபத்துக்குள்ளான வீட்டை பார்வையிட்டதோடு, குமாரின் குடும்பத்தினரிடம் அரசின் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். மேலும், அரசின் புதிய வீடு கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வட்டாட்சியர் புவியரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in