

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக் கடன், கல்விக் கடன், கைவினைக் கலைஞர்களுக்கு கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் சிறுபான்மையினர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக வரும் 18-ம் தேதி காலை 10.30 மணிக்கு, மேலப்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திலும், 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு மானூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். இத்தகவலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.