Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டம் முழுவதும் பகுதி மற்றும் முழுமையாக 135 வீடுகள் சேத மடைந்துள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கன மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக் கவும், ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரவும், அங்குள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘வடகிழக்கு பருவமழையால் சேதமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 16-ம் தேதி வரை பெய்த மழை சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால் ஒரு மனித உயிரிழப்பும், 8 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. 135 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வீடு இழந்தவர்கள் திருப்பத் தூர், குரும்பேரி, ஆதியூர் ஆகியஇடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி யுள்ளது. அணையில் இருந்து அரசு உத்தரவுப்படி பாசன வசதிக்கு தண்ணீர் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 24 ஏரிகள் 100% நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. ஊரக உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள 244 ஏரிகளில் 48 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 6 ஏரிகளில் 2 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 30 ஏரிகளில் ஒரு ஏரிகூட முழுமையாக நிரம்பவில்லை.
அதேபோல, உள்ளாட்சி நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் 260 குளங்கள் உள்ளன. இதில், 49 குளம் முழுமையாக நிரம்பியுள்ளன. நகராட்சிகளில் கட்டுப்பாட்டில் உள்ள 8 குளங்களில் 4 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. பேரூராட்சிகளில் கட்டுப்பாட்டில் உள்ள 2 குளங்களும் நிரம்பவில்லை.
மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் 127 நீர் நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 87 நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. நிரம்பிய அனைத்து ஏரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கரைகள் பலமாக உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT