தோட்டக்கலை பயிர்களையும் காப்பீடு செய்யலாம் :

தோட்டக்கலை பயிர்களையும் காப்பீடு செய்யலாம் :
Updated on
1 min read

கீரப்பாளையம் வட்டாரத்தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் கலைமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கீரப்பாளையம் வட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்துக்கு பின்னர் புதிதாக நடவு செய்த வாழை, மரவள்ளி, கத்தரி, மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயனடையலாம். வாழைக்கு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 2,571, காப்பீடு செய்ய கடைசி தேதி 28.02.2022 ஆகும்.

மரவள்ளிக்கு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 1,346, காப்பீடு செய்ய கடை தேதி 28.02.2022. கத்திரிக்கு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ. 504, காப்பீடு செய்ய கடைசி தேதி 15.02.2022.மிளகாய்க்கு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 964, காப்பீடு செய்ய கடை தேதி 31.12.2021 ஆகும். மேலும் விபரங்களுக்கு கீரப்பாளையம் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in