சுங்கச்சாவடி சேத வழக்கில் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்  :

சுங்கச்சாவடி சேத வழக்கில் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் :

Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடந்த 2018-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுங்கச்சாவடி அடித்து உடைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கின் விசாரணை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.

அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களின் வழக்கை விசாரிக்க மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு முழு அதிகாரமும் இருப்பதால் இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் தொடர்புடைய 11 பேர் ஆஜராயினர்.

தொடர்ந்து, வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா இவ்வழக்கின் விசாரணையை நாளை (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in