பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நிகழாண்டு - 2,309 விதை மாதிரிகளை பரிசோதித்ததில் 92 தரமற்றவை : திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் தகவல்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நிகழாண்டு -  2,309 விதை மாதிரிகளை பரிசோதித்ததில் 92 தரமற்றவை :  திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் தகவல்
Updated on
1 min read

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில், நிகழாண்டு 2,309 விதை மாதிரிகளை பரிசோதித்ததில், 92 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான விதை பரிசோதனை நிலையம், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில், விவசாயிகள் விதைக்கும் விதைகளின் தரத்தை அறியும் விதமாக முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்த தன்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021-22-ம் ஆண்டு இந்நிலையத்தின் மூலம் 2,820 விதை மாதிரிகளை பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 2,309 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 92 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கு...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in