புத்தக கண்காட்சி :

புத்தக கண்காட்சி  :
Updated on
1 min read

பள்ளிக்கல்வித் துறை, தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், ரோட்டரி கிளப் சார்பில் தேசிய நூலக விழா மற்றும் புத்தக கண்காட்சி தென்காசி நூலகம் அருகே உள்ள கட்டிடத்தில் தொடங்கியது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். தொழிலதிபர் பாலகிருஷ்ணன், மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன், நகர திமுக செயலாளர் சாதிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

மருத்துவர் பாலாஜி முதல்விற்பனையை பெற்றுக்கொண்டு, ரூ.5 ஆயிரம்வழங்கி பெரும்புரவலராக இணைந்து கொண்டார். மேலும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 2 மின்விசிறிகளை நூலகத்துக்கு வழங்கினார். 333 உறுப்பினர்களுக்கான தொகையை சாதிர் வழங்கினார்.

விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன், இளமுருகன், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றிய மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குநர் பாரதிராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in