கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் - குழந்தைகள் தின சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணி :

கடலூரில் குழந்தைகள் தின சிறப்பு சட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ். சுபா அன்புமணி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கடலூரில் குழந்தைகள் தின சிறப்பு சட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ். சுபா அன்புமணி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
Updated on
1 min read

கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் தின சிறப்பு சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் குழு வின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். ஜவஹர் உத்தரவின் படி கடலூர் தொழி லாளர் நல நீதிமன்ற நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியான எஸ். சுபா அன்புமணி கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

இதில் கடலூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சார்பு நீதிபதி கள், நீதித்துறை நடுவர்கள், வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் வரை ஊர்வலம் சென் றது. இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.

இதே போல் சிதம்பரம், பண் ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் தின சிறப்பு சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in