அடைமழைக்குப் பிறகு மீண்டும் நெல் சாகுபடி பணி தொடக்கம் :

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நேற்று  நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நேற்று நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக அடைமழை பெய்ததால் பாதிக் கப்பட்டிருந்த நெல் சாகுபடி பணி நேற்று முதல் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும். அதில், 70 சதவீதம் சாகுபடி முடிந்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக அடை மழை பெய்து வந்தது. இடையில் தீபாவளி பண்டிகையும் வந்ததால், சாகுபடி பணி பாதிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2 நாட்களாக பகலில் மழை பெய்யாததால், நேற்று முதல் மீண்டும் நெல் சாகுபடி பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. 25 ஆயிரம் ஏக்கரில் இனிமேல்தான் சாகுபடி பணி நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in