கடலூரில் நேரு யுவகேந்திரா இளையோர் பேச்சுப் போட்டி :

கடலூரில் நேரு யுவகேந்திரா இளையோர் பேச்சுப் போட்டி :
Updated on
1 min read

நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய அளவிலான இளையோர் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா சங்கத்தின் மூலம் தேசப் பற்றும் தேச நிர்மாணமும் (PATRIOTISM AND NATION BUILDING) என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி இந்த மாதம் நடத்தப்பட உள்ளது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டும் 10 நிமிடங்கள் பேச வேண்டும். போட்டிகளில் 18 முதல் 29 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாத இளைஞர், மகளிர் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க மாவட்ட இளையோர் அலுவலர், நேரு யுவ கேந்திரா,5ஏ சக்கரை கிராமணி தெரு, புதுப்பாளையம், கடலூர் 607 001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று வரும் 25-ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக 04142 – 293822 , 9489450338 , 7907245013 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட இளையோர் அலுவலர் ரிதேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in