கொலை வழக்கில் இருவர் குண்டாஸில் கைது :

கொலை வழக்கில் இருவர் குண்டாஸில் கைது :
Updated on
1 min read

வேலூர் சைதாப்பேட்டை ஷெரிப் அலி சுபேதர் தெருவைச் சேர்ந்தவர் குமார் (26). இவரது நண்பர் ராஜி. இவர்களுக்கும், சைதாப்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிவர்மா (30), ராஜேஷ் (31) ஆகியோருக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரவிவர்மா மற்றும் ராஜேஷ் ஆகியோர் தாக்கியதில் படுகாயம் அடைந்த குமார், ராஜி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப். 24-ம் தேதி குமார் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ரவிவர்மா, ராஜேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in