15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாட்டார்மங்கலம் கண்மாய் :

சிங்கம்புணரி அருகே நாட்டார்மங்கலம் அய்யனார் கோயில் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரில் குளித்து மகிழும் கிராம மக்கள்.
சிங்கம்புணரி அருகே நாட்டார்மங்கலம் அய்யனார் கோயில் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரில் குளித்து மகிழும் கிராம மக்கள்.
Updated on
1 min read

இந்நிலையில் தற்போது சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த தொடர் மழையால் அய்யனார் நாட்டார்மங்கலம் கோயில் கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அக்கண்மாயில் இருந்து உபரி நீர் கலுங்கு வழியாக அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் கிராம மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 1,460 பொதுப்பணித்துறை கண்மாய்கள், 4,251 ஒன்றியக் கண்மாய்கள் உள்ளன. இதில் 74 பொதுப்பணித் துறை கண்மாய்கள், 68 ஒன்றியக் கண்மாய்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. மேலும் 166 பொதுப்பணித் துறை கண்மாய்கள், 238 ஒன்றியக் கண்மாய்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. வைகை ஆறு, உப்பாறு, மணிமுத்தாறு, விரிசுழி ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in