தேனியில் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் அச்சக நவீன கட்டிடத்தை தொழிலதிபர் வி.ஜோசப் திறந்து வைத்தார்.
தேனியில் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் அச்சக நவீன கட்டிடத்தை தொழிலதிபர் வி.ஜோசப் திறந்து வைத்தார்.

தேனி நாடார் உறவின்முறை கல்வி நிறுவனங்களில் கட்டிட திறப்பு விழா :

Published on

நிகழ்ச்சிக்கு உறவின்முறைத் தலைவர் கேபிஆர் முருகன் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தேனி விருதுநகர் இந்து நாடார் மகமை அபிவிருத்தி பண்ட் செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு ஆண்கள் பள்ளி வகுப்பறையையும், தொழிலதிபர் வி.ஜோசப் அச்சக கட்டிடத்தையும், நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் பி.கமலக்கண்ணன் நர்சரி பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தனர். மேல்நிலை மற்றும் நர்சரி பள்ளி மற்றும் அச்சகச் செயலாளர்கள் ஏ.ராமகிருஷ்ணன், என்.ராமர்பாண்டியன், ஏ.நாகராஜ், ஆட்சிமன்ற, நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in