குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு : லட்சார்ச்சனை தொடக்கம் :

குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு  : லட்சார்ச்சனை தொடக்கம் :
Updated on
1 min read

நாளை (நவ.13) சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதனையொட்டி நேற்று சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் முதல்கால லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், கோயில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து இன்று இரண்டு முதல் ஐந்தாம் கால லட்சார்ச்சனை நாளை (நவ.13) பகல் 2 மணி வரை நடைபெறும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு யாகசாலை தொடங்கி 6.10 மணிக்குள் பரிஹார மஹாயாகம், மகாபூர்ணாஹூதி, திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in