சத்துணவு காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை ரத்து :

சத்துணவு காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை ரத்து :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக இருந்த 143 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 58 சமையலர் பணியிடங்கள் மற்றும் 289 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பின்னர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கை தற்போது நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.

இந்தப் பணியிடங்களை நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை பின்னர் தனியே வெளியிடப்படும் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in