Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் : வரும் 30-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்

லேலூர், தி,மலை மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 1-1-2022-ம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 1, பெண்கள் 6 லட்சத்து 58 ஆயிரத்து 300 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 148 பேர் என மொத்தம் 12 லட்சத்து 76 ஆயிரத்து 449 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் 650 வாக்குச்சாவடி அமைவிடங்கள், மாநகராட்சி, நகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர்கள் அலுவலகங்களில் வரும் 30-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு புதிய வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம், திருத்தம், பெயர் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ள 650 வாக்குச்சாவடி அமைவிடங்களில் நாளை (13-ம் தேதி) மற்றும் 14-ம் தேதி (நாளை மறுதினம்), வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற தேசிய இணையதளத்தின் வாயிலாக அல்லது voter helpline என்ற செல்போன் செயலி வழியாகவும் மேற்கொள்ளலாம்’’ என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நாளை (13-ம் தேதி) மற்றும் நாளை மறு தினம்(14-ம் தேதி) நடைபெற உள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச அழைப்பை தொடர்பு கொள்ளலாம். அதேபோல் https://www.election.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் பெயரை சரிபார்த்து கொள்ளலாம். தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x