

மதுரையில் ஒரே நாளில் ஹோட்டல் உரிமையாளர், ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலரின் மனைவி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
மதுரை புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகே உள்ள ஹோட்டலின் உரிமையாளர் முத்து.
இவரது பங்குதாரர் ஆத்திகுளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (45). உரிமையாளர் முத்து நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், முத்துக்குமார் ஹோட் டலைக் கவனித்தார். நேற்று மாலை 4 மணியளவில் அவர் ஹோட்டலில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரி யவந்தது.
புதூர் போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். அவரது இடது கை துண்டிக்கப்பட்டிருந்தது. முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. போலீஸார் விசாரிக்கின்றனர்.
பெண் கொலை
இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், தனது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
எஸ்.எஸ்.காலனி போலீஸார் சிவக் குமாரைக் கைது செய்தனர்.