

பெரியாறு அணை உரிமையை விட்டுக் கொடுத்ததாக தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 8 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை மாநகர் அதிமுக சார்பில் முனிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் செல் லூர் ராஜு எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது:
பெரியாறு அணையில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர்தான் 132 அடி என்று இருந்த நீர் தேக்கும் அளவை 136 அடியாக உயர்த்தினார். அதன் பிறகு ஜெயலலிதா 142 அடியாக உயர்த்தினார். ஆனால், திமுக அரசு தமிழக உரிமையை கேரள அரசிடம் விட்டுக் கொடுத்துள்ளது.
எப்போதும் உரிமைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி பெரியாறு பிரச்சினைக்காக இது வரை குரல் கொடுக்கவில்லை என்றார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டி.கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர் கே.மாணிக் கம், முன்னாள் எம்எல்ஏஎஸ்.எஸ்.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தலைமை வகித்தார். மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான், முன் னாள் எம்எல்ஏ கே.தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேன்மொழி எம்.எல்.ஏ. நத்தம் ஒன்றியத் தலை வர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
சிவகங்கை
கம்பத்தில் அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந் தது.