மதுரையில் மார்க்சிஸ்ட், காங். ஆர்ப்பாட்டம் :

மதுரை பெத்தானியாபுரத்தில் தனியார் மதுபானக் கடைபோல் செயல் படும் மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை பெத்தானியாபுரத்தில் தனியார் மதுபானக் கடைபோல் செயல் படும் மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை பெத்தானியாபுரத்தில் மது விற்பனை நடைபெறும் மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி மார்க் சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ரா.லெனின் தலைமை வகித்தார்.

பகுதிக்குழு செயலாளர் கணேசன், மாவட்டக்குழு உறுப் பினர் இளங்கோவன், திமுக வட்டச் செயலாளர்கள் நாகஜோதி சிவா, நாகராஜ், காங்கிரஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவர் வேல்பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரா.லெனின் கூறுகையில், பெத்தானியாபுரத்தில் மருத்துவ மனைகள், பள்ளிகள், வணிக வளாகம் அருகில் தனியார் மதுபானக் கடையை (மனமகிழ் மன்றத்தை) திறக்க அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் நிர் வாகத்திடம் மனு அளித்திருந் தோம். அதை மீறி மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது.

பெண்கள், தொழிலாளர்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை போல் செயல்படும் மனமகிழ் மன்றத்தை மூட மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in