

மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனிதேர்வா்கள் 15 நாட்களுக்குள் வந்து பெற்றுக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி அரசுத்தேர்வுகள் அலுவலக உதவி இயக்குநர் ராகினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த மார்ச் 2014-ம் ஆண்டு முதல் செப், 2018 வரையிலான உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மார்ச் 2017 முதல் செப் 2018 வரையிலான மேல்நிலை தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் கழிவு தாள்களாக மாற்றப்படவுள்ளதால், தனித்தேர்வர்களால் உரிமை கோரப்படாத சான்றிதழ்களை அடுத்த 15 நாட்களுக்குள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ பெற்றுக் கொள்ளலாம்.