கடலூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள ஆயத்தம் : பல்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி வட்டம் குண்டியமல்லூர் பகுதியில் பெருமாள் ஏரியில் இருந்து மழை நீர் வெளியேறுவதை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம் குண்டியமல்லூர் பகுதியில் பெருமாள் ஏரியில் இருந்து மழை நீர் வெளியேறுவதை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கனமழை தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை கள் குறித்து, சிதம்பரம் பொதுப் பணித்துறை அலுவலகத்தில வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை,நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய ஆட்சியர், “பொதுப்பணித்துறையினர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, நீர்நிலைகளில், நீர்வரத்து, நீர் வெளியேற்றத்தை கண்டறிந்து பாதுகாப்பான முறை யில் நீரை வெளியேற்ற வேண்டும்.

நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். வெள்ளப் பாதிப்பினால் சாலைகள் சேதமடைந்து விட்டால் உடனடியாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதை அமைக்கவோ அல்லது பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப சாலையை சரி செய்ய வேண்டும். சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தங்கள்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்றுஅறிவுறுத்தினார்.

தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டம் குண்டியமல்லூர் பகுதியில் பெருமாள் ஏரியிலில் இருந்துமழைநீர் வெளியேறுவதையு ம், பெருமாள் ஏரியில் இருந்துகீழ்பூவாணிக்குப்பம் மதகு மூலம் நீர் வெளியேற்றப்படுவதையும் பார்வை யிட்டார்.

கோட்டாட்சியர் ரவி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பால முருகன்,நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in