மதுரை மாநகராட்சியை கண்டித்து மறியல் :

மதுரை மாநகராட்சியை கண்டித்து மறியல் :

Published on

மதுரையில் சாலையில் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக நடவ டிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை அரசரடி அருகே பாண்டியன் நகரில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் வெளியேறியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி மாநகராட்சி அதி காரிகளிடம் முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியினர், நேற்று காலை காளவாசலில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in