

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோட்டைவாசல் மேலவீதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(26), இருசக்கர வாகன மெக்கானிக். இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததால், அச்சிறுமி கர்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.