Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

நவ.12-ல் ஜூனியர் தடகள போட்டிகள் :

வேலூர் மாவட்ட அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாநில அளவிலான தடகளபோட்டிகளுக்கு மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, வேலூர் மாவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் நேதாஜி விளையாட்டரங்கில் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு செய்துகொள்ள வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். ஒரு போட்டியாளர் தலா இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களுடைய சுய விவரங்களை vdaaentry.gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 86680 -97652, 99422-01920, 87782-23755, 96006-67799 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x