

தேனி மாவட்டம், அனுமந்தன் பட்டியைச் சேர்ந்தவர் மணி கண்டன் (26) திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக திருப்பூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மனைவி கவுசல்யா, மகன் விபுசன் (3) ஆகியோருடன் கடந்த 3-ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தார். தேனி - வீரபாண்டி புறவழிச் சாலையில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் மணிகண்டன், விபுசன் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீப் ஓட்டுநர் சந்துருவை கைதுசெய்து பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதனகலா விசாரணை நடத்தி வருகிறார்.