நெல்லையில்  அண்ணன், தம்பிக்கு  வெட்டு :

நெல்லையில் அண்ணன், தம்பிக்கு வெட்டு :

Published on

திருநெல்வேலி டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த மாரிச்செல்வம் (29), அவரது சகோதரர் சுடலைமுத்து (27) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்குமுன் பட்டாசு வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது வரிசையில் நிற்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியில் டீக்கடை நடத்திவரும் முத்தையா என்பவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து முத்தையாவின் கடைக்கு நேற்றுமுன்தினம் மாரிச்செல்வமும், சுடலைமுத்துவும் வந்து தகராறில் ஈடுபட்டனர். கடை சூறையாடப்பட்டது. இதையடுத்து மாரிச்செல்வம், சுடலைமுத்து ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். முத்தையாவும் பலமாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in