பட்டாசு தீ விபத்துகளை தடுக்க  -  தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர் :

பட்டாசு தீ விபத்துகளை தடுக்க - தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர் :

Published on

கோவை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதுதொடர்பாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) அண்ணாதுரை கூறும்போது, ‘‘கோவையில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் உக்கடம், பூ மார்க்கெட், பேரூர் உள்ளிட்ட 10 வெளியிடங்களிலும் தீயணைப்புத்துறையினர், நீர் தாங்கி வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர். அழைப்பு வந்தால், உடனடியாக சென்று தீயணைப்புப் பணியில் அவர்கள் ஈடுபடுவர். பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in