Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும் - மதுரை மாவட்ட மாணவர்கள் 166 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி :

நீட் தேர்வில் மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 523 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஆர்.பிரியங்கா 720 மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மதுரை எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.ஹரிஷ்குமார் 373 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். மதுரை மாநகராட்சி ஈவெரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஆஷிகா ராணி 351 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் விஎச்என் மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.வசீகரன் 506 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், அதே பள்ளி மாணவர் ஸ்ரீராம் 487 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நாகநந்தினி 407 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் 303 பேர் தேர்வெழுதியதில் 95 பேரும், உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 220 பேர் தேர்வெழுதியதில் 71 பேர் உள்பட மொத்தம் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ரேங்க் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவியர் ஆர்.பிரியங்கா (414 மதிப்பெண்), எஸ்.ஆஷிகாராணி (351), ஏ.ஜி.தீபாஸ்ரீ (301) ஆகியோரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x