Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

காரைக்குடியில் தீபாவளியையொட்டி 2 மடங்காக உயர்ந்த தக்காளி விலை :

தீபாவளியையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த சந்தையில் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று காரைக்குடியில் சந்தை கூடியது. காய்கறிகளின் வரத்து குறைவு, பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலை கடுமையான உயர்ந்திருந்தது. இருதினங்களுக்கு முன்பு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி 2 மடங்காக உயர்ந்து ரூ.70 விற்பனையானது.

அதேபோல் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நாட்டு கத்தரி கிலோ ரூ.80-க்கும், கிலோ ரூ.80-க்கு இதர ரக கத்தரி ரூ.120-க்கும் , கிலோ ரூ.60 விற்கப்பட்ட வெண்டை ரூ.120-க்கும், கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட உருளை ரூ.50-க்கும் என முக்கிய காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x