சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு :

சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு  :
Updated on
1 min read

கோயம்புத்தூரில் இருந்து பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் வந்த சரக்கு லாரி ஒன்று பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரை அடுத்த மலையப்ப நகர் பிரிவில் திரும்பியது.

அப்போது, அந்த லாரியை பின் தொடர்ந்து சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் லாரி, பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மினி சரக்கு வேன், சரக்கு லாரி ஆகியவை மோதிக் கொண்டன. இதில், வேன் ஓட்டுநர் பெரம்பலூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (43), வேனில் பயணம் செய்த சித்தளியை சேர்ந்த நாராயணசாமி மனைவி நல்லம்மாள் (56), தொண்டமாந்துறை அருகே உள்ள விஜயபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி லதா (45) ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நல்லம்மாள், லதா இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர். பெரம்பலூர் போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in