

இளையான்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ் ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நட மாட்டம் அதிகமாக உள்ளது. அவர் கள் உதவி செய்வதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் பொதுமக்களை ஏமாற்றுவோரை கண்டுபிடிக்க முடிவதில்லை. பொது மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க. இளையான்குடி வட்டாட்சியர் அலு வலகத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டது.