வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது : நடிகர் கருணாஸ் வலியுறுத்தல்

கருணாஸ்
கருணாஸ்
Updated on
1 min read

பாமகவினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்திருப்பதை அனைத்து சமுதாயத்தினர் சார்பில் வரவேற் கிறேன் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் அவசரமாகக் கொண்டு வரப்பட் டது 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு. இதை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினர் சார்பில் வரவேற்கிறேன். சமூக நீதி நிலைக்க, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே அனைத்து சமுதாய மக்களை நல்வழிப்படுத்த சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

சுதந்திரத்துக்குப் போராடி, நீண்ட நாட்கள் சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது அவர்களது கட்சி விவகாரம். அது குறித்து நான் பேச விரும்பவில்லை. நகர்ப்புறத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிர்வாகிகளிடம் பேசி முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in