

ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களின் கை அசைவுக்கேற்ப சிறகுகள் விரிக்கும் வகையில் சென்சாரில் இயங்கும் எலெக்ட்ரானிக் தேனீ மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் அமைக்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டம் ரங்கம் அருகே மேலூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 300-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 125-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள், 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதுதவிர குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை குடில்கள், செயற்கை நீரூற்றுகள், நீர் தாவரங்களைக் கொண்ட குட்டைகள், சிறு மரப்பாலங்கள், குழந்தைகளுக்கான படகு குழாம், பல்வேறு வகையான தாவர வகைகளுடன் உள்ள நட்சத்திரவனம், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கும் காட்சிக்கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பார்வையிட தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதற்கேற்ப இங்கு புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்தி தரும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் குழந்தைகளுக்கான ரயில், பேட்டரி கார், குழந்தைகளுக்கான பலூன் விளையாட்டுகள் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி
பார்வையாளர்களை மகிழ்விக்கும்