

கடலூர் மாவட்டத்தில் யூரியா, டிஏபி உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
கடலூர் மாவட்டம் முழுவதும் யூரியா, டிஏபி உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் தனியார் நிறுவனங்கள் உரத்தைபதுக்கி வைத்து, விலையை ஏற்றி விற்கும் நிலை உள்ளது. மாவட்டநிர்வாகம் தனியார் நிறுவனங் களில் ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.கிள்ளை,தில்லை விடங்கன், பிச்சாவரம் வேளாண் கூட்டுறவு வங்கிகளில்உரம் இல்லை. கூட்டுறவு வங்கிக ளில் கடன் வாங்கியிருக்கும் விவசாயிகள் கடன் வாங்காத விவசாயிகள் அனைவருக்கும் யூரியா, டிஏபி உரம் கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். சிதம்பரம் கிழக்குப் பகுதியில் நடவு பணிகள் தாமதமாக தொடங்கும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் வழங்க மறுக்கிறார்கள். இன்சூரன்ஸ் கட்டுவதற்கு தேதி முடிவு அடையும் நிலையில் விவசாயிகள் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும் என கூறி யுள்ளார்.