

மதுரையில் வாகனங்களின் முகப்பு விளக்கில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை நீதிபதி தீபா, காவல்துறை அதிகாரி தொடங்கி வைத்தனர்.
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது.
மேலும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், முகக்கவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. சார்பு நீதிபதி, இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா தலைமை வகித்தார்.
போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திருமலைகுமார், மாரியப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் தயாள கிருஷ்ணன் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, காயத்ரி, ராஜு, போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், தங்கமணி, சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார், வீரபத்திரன், திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.