Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் மூடப்பட்ட நூலகங்கள் விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப் படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.44 லட்சத்தில் அவசர சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டி டம், அரளிக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். தொடர்ந்து 45 மாணவர்களின் உயர்கல்விக்கான கட்டணத்தை சொந்தப் பணத்தில் இருந்து அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் மூடப்பட்ட நூலகங்கள் விரைவில் செயல் பாட்டுக்குக் கொண்டு வரப்படும். ஒருசில இடங்களில் ஊராட்சி தலைவரின் கணவர்களின் ஆதிக் கம் இருக்கத்தான் செய்கிறது. அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுவந்தால் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் ஓரிடத்தில் ஒரு வாக்கில் கூட திமுக தோற்றுள்ளது. இதுவே தேர்தல் நேர்மையாக நடந்துள்ளதற்கு சான்று. ஆனால் தேவையில்லாமல் திமுக அரசு மீது பொய்ப்புகார்களை கூறி வருகின்றனர். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் நிலுவைத்தொகை முழுவதும் தீபாவளிக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT