பாரதி கலை இலக்கிய மன்ற முப்பெரும் விழா :

மதுரையில் பாரதி கலை இலக்கிய மன்ற விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
மதுரையில் பாரதி கலை இலக்கிய மன்ற விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
Updated on
1 min read

மகாகவி பாரதி கலை இலக்கிய மன்ற 4-வது ஆண்டையொட்டி, பாரதியாரின் 139-வது பிறந்த நாள், சாதனையாளர்களுக்கு விருதுகள், கலை இலக்கியப் பெருவிழா ஆகிய முப்பெரும் விழாக்கள் மதுரையில் நடந்தன.

கல்வியாளர் மனோகரன் தலைமை வகித்தார். இலக்கிய மன்ற இணைச் செயலர் சிங்காரவேலன், பொருளாளர் சிவபிரகாசம், துணைத்தலைவர் அக்னிபாரதி முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் பிரகாஷ் வரவேற்றார். தமிழ்நாடு திரைப்பாடலாசிரியர்கள் சங்கத் தலைவர் தமிழ் அமுதன், தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் கோசுமணி ஆகியோர் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். பாரதி கலை இலக்கிய மன்றச் செயலர் தமிழ்ப்பிரியன், தலை வர் தமிழ் அமுதன் பாரதி நற்பணி மன்ற பொருளாளர் சங்கர் மாதவன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பாரதியும், பாமரனும் எனும் தலைப் பில் விசாரணை மன்றம் நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. உதவி பேராசிரியர் அழகுபாரதி, ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் தண்ணாயிரம், நடிகர் பருத்திவீரன் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in