

திருச்சி கே.கேநகர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஜெயில் கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி வேனில் 20 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்த ராஜூ(50), நாகமங்கலம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாலிக் பாட்சா(24) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.